ஆப்நகரம்

கப் சிப்னு மாறிப்போன நெல்லை: வந்துபாரு என போலீசார் விடும் எச்சரிக்கை!

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கைத் தொடர்ந்து அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகைக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மருந்தகம், பாலகம் மட்டும் செயல்பட்டது. போக்குவரத்து இல்லாதததால் பிரதான சாலைகள் அனைத்து வெறிச்சோடி காணப்பட்டது.

Samayam Tamil 16 May 2021, 5:56 pm
நாடு முழுவதும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய கடைகளான காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், டீ கடைகள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்த சூழலில் ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு டீ கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil கப் சிப்னு மாறிப்போன நெல்லை: வந்துபாரு என போலீசார் விடும் எச்சரிக்கை!


வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையைத் தொடர்ந்து நெல்லையில் காய்கறிச் சந்தைகள், மளிகைக்கடைகள் , ஆகியவை மூடப்பட்டுள்ளது.

மிகவும் அத்தியாவசியமான மருந்துக்கடைகள், மருந்து உபகரணங்கள் விற்பனை கடைகள், பாலகம் ஆகியவை மட்டும் செயல்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம், போக்குவரத்து இன்றி மாநகர் பகுதியின் நெல்லை டவுண், பாளையங்கோட்டை பகுதியின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

நெல்லை டிஸ்ட்ரிக் கிளப் கட்டிடம் இப்போ எப்படி மாறியிருக்குன்னு பாருங்க!

மேலும் சாலைகளில் மாநகர காவல்துறையினர் ஆங்காங்கு சோதனைச் சாவடிகள் அமைத்து தேவையில்லாமல் சாலைகளில் வாகனத்தில் வருபவர்களை நிறுத்தி எச்சரித்துத் திருப்பி அனுப்பினர். மாநகர் பகுதி முழுவதும் 20க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி