ஆப்நகரம்

தமிழ்நாட்டில் போக்ஸோ விளைவு என்ன: திருநெல்வேலி கமிஷ்னர் டாமோர் விளக்கம்!

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கமிஷ்னர் தீபக் எம் டாமோர், சிறார் குற்றங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது தொடர்பான பயிலரங்கு ஒன்றில் பங்கேற்று, அது தொடர்பான விளக்கத்தை வழங்கினார்...

Samayam Tamil 6 Nov 2020, 5:36 pm
சிறார் நீதி அமைப்பு குழந்தை நலக் காவல் அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்பட்டது. இந்த பயிலரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய மாநகர காவல்துறை ஆணையர் தீபக் எம் டாமோர், தமிழ்நாட்டில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றம் போக்சோ சட்டத்தின் காரணமாகக் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil தமிழ்நாட்டில் போக்ஸோ விளைவு என்ன: திருநெல்வேலி கமிஷ்னர் டாமோர் விளக்கம்!
தமிழ்நாட்டில் போக்ஸோ விளைவு என்ன: திருநெல்வேலி கமிஷ்னர் டாமோர் விளக்கம்!


இளம் சிறார் நீதி அமைப்பு குழந்தைகள் நலக் காவல் அலுவலர்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் மாநகர காவல்துறை ஆணையர் தீபக் எம் டாமோர் கலந்து கொண்டு பயிலரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

மேலும் டாமோர், சிறார்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக விழிப்புணர்வு பதாகைகள் அது தொடர்பான சின்னங்களை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குகின்றனர். அப்படி இருக்கக் கூடாது. அதேபோல், புகார் அளித்தவர்களிடம் காவல்துறையினர் அதனை உளவியல் ரீதியாக அணுகி அதற்கு உரியத் தீர்வு காண முயல வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் போக்சோ சட்டத்தின் காரணமாகக் குறைந்து வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சமூக அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் போதிய விழிப்புணர்வு உள்ளது. இதன் காரணமாகச் சிறார் மீதான குற்றங்கள் குறையும்.

தொடர்ந்து இந்த பயிலரகங்களில் சிறார் குற்றங்களை எப்படிக் கையாள வேண்டும், எதுமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், குழந்தைகள் பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது எப்படி, தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், குழந்தைகள் நல அமைப்பு காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, கூடுதல் துணை ஆணையர் பாஸ்கரன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி