ஆப்நகரம்

நம்பியாறு அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு

நெல்லை நம்பியார் அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 27.1 .2021 முதல் 31.3.2021 வரை நாள்தோறும் வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது

Samayam Tamil 23 Jan 2021, 6:34 pm
நெல்லை மாவட்டம் நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் நீர் திறந்து விட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil nambiyar dam order


இந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக நெல்லை மாவட்டத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு தாமிரபரணி ஆற்றங்கரையோரமுள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பாபநாசம் அணைக்கட்டில் இருந்து நீர் வெளியேற்றப்படுவது படிப்படியாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், நம்பியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம் நம்பியார் நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.




விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று திருநெல்வேலி மாவட்டம் நம்பியார் நீர்த்தேக்கத்தில் இருந்து, நம்பியார் நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளில் பிரதான கால்வாய்களின் கீழ், பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 27.1 .2021 முதல் 31.3.2021 வரை நாள்தோறும் வினாடிக்கு 60 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

அடுத்த செய்தி