ஆப்நகரம்

எம்.சாண்ட் மணலுக்கு பதிலாக கனிம வளங்கள் சுரண்டல்... மேலும் மூன்று பேர் கைது!

கல்லிடைகுறிச்சியில் தனியார் எம் சாண்ட் நிறுவனம் கனிம வளங்களை சுரண்டியதாக எழுந்த புகாரில் மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 6 Oct 2020, 8:41 pm
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ளது பொட்டல்கிராமம் . இங்கு தனியார் எம்.சாண்ட் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் பாறைகள் எடுக்கப்பட்டு அவற்றை மணலாக்கி விற்பனை செய்ய வேண்டும்.
Samayam Tamil minerals


ஆனால் பாறைகற்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள ஓடையில் மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாக சிவசங்கரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து சேரன்மகாதேவி கோட்டாட்சித் தலைவர் பிரதீக்தயாள் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் அங்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

உ.பி.யில் தாக்கப்பட்ட ராகுல் காந்தி: நெல்லையில் காங்கிரஸ் தர்ணா!

இதுதொடர்பாக கனிம வளங்களை கடத்தியதாக தனியார் தொலைக்காட்சி நிருபர் ஜான்பீட்டர், பால்ராஜ், ஆத்திப்பாண்டியன் , சங்கரநாராயணன் ஆகிய 4 பேர் ஏற்கெனவே கைது செய்யபட்டனர். மேலும் முறைகேடு நடந்துள்ள கல்குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் 9.5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து குவாரியில் நடந்த முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடந்துவந்த நிலையில், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோயல், சுப்பையா, சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த முத்துசரவணன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட இரண்டு கார்கள், பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி