ஆப்நகரம்

வாசலில் படுத்திருந்த போலீஸ் இன்ஃபார்மர் கொலை... ஏன்?

பரமசிவன் அயந்து தூக்கிக்கொண்டிருந்த நிலையில் அவர் மீது கல்லை போட்டும் , அரிவாளால் சரமாரியக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர் . இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Samayam Tamil 24 Oct 2020, 10:48 am
வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த விவசாயியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் போலீஸ் இன்பார்மராகவும் செயல்படுவதாக கூறப்படுவதால் அந்த முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
Samayam Tamil கொலை செய்யப்பட்ட நபர்


நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள உடையார்குளத்தைச் சேர்ந்தவர் பரமசிவன். இவர் விவசாயம் மற்றும் கூலித் தொழில் செய்து வருகிறார் . இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அந்தப் பகுதியில் நடக்கும் மணல் கடத்தல் , உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கும் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு உடையார்குளத்தில் நவராத்திரி திருவிழாவைத் தொடர்ந்து காளி பூஜை நடந்துள்ளது. அந்த பூஜையில் கலந்த கொண்டுவிட்டு , வீட்டிற்கு வந்த அவர் எப்போதும் வீட்டின் பின்பக்கம் கட்டில் போட்டு படுப்பது வழக்கம் . அதேபோல் நேற்றும் படுத்துள்ளார் .

வீட்டிற்கு பின் பக்கம் குளம் உள்ளது. அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், பரமசிவன் அயர்ந்து தூக்கிக்கொண்டிருந்த நிலையில் அவர் மீது கல்லை போட்டும் , அரிவாளால் சரமாரியக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர் . இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிறிஸ்தவ கல்லறையைச் சேதப்படுத்திய வழக்கு: இந்து அமைப்பினர் ஆட்சியரிடம் முறையீடு!

காலையில் அவரது மனைவி எழுத்து பார்த்த போது கணவர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த நெல்லை தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் . இதனையடுத்து தாழையூத்து காவர் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மேலும் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து , போலீஸ் இன்பார்மராக செயல்பட்ட நிலையில் இதில் ஏற்பட்ட முன்விரோதத்ததில் கொலை செய்யப்பட்டாரா, அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா என தீவிரமாக விசாரித்து வருவதுடன் கொலையாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர் .

அடுத்த செய்தி