ஆப்நகரம்

மருத்துவ, எலக்ட்ரானிக் கழிவுகள் எரிப்பு; புகையால் பலருக்கு மூச்சு திணறல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் மருத்துவ மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதால் சுற்றுப்புற பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், புகையால் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் புகார்.

Samayam Tamil 7 Apr 2023, 8:20 pm

ஹைலைட்ஸ்:

  • விவசாய நிலங்களுக்கு அருகே கொட்டப்படும் கழிவுகள்
  • கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுசூழல் பாதிப்பு
  • புகையால் பலருக்கு மூச்சு திணறல் பிரச்சனை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கொட்டப்பட்டுள்ள மருத்துவ மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள்
கொட்டப்பட்டுள்ள மருத்துவ மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஒதுக்குப்புறமான இடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன.
இதன் அருகே கழிவுகளை பிற மாநில பகுதிகளில் இருந்தும் பல இடங்களில் இருந்தும் கும்பல்கள் கொண்டு வந்து கொட்டுகின்றனர். மேலும் அவற்றை எரித்து அதனுள் உள்ள இரும்பு, செம்பு ஆகியவற்றை பிரித்தெடுத்து விற்பனை செய்வதை வாடிக்கையாக்கி உள்ளனர்.

விவசாய நிலம் அருகே கொட்டப்படும் கழிவுகள்

இதன் படி ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூர் பகுதியில் ஊருக்கு வெளியே விவசாய நிலங்களுக்கு அருகே ஓர் இடத்தில் சிலர் கழிவுகளை கொட்டி அவற்றை தீ வைத்து எரித்து வந்துள்ளனர்.

இதில் மருத்துவ மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளும் இருந்துள்ளன. இந்த கழிவுகள் எரிக்ககப்படும் போது, அதில் இருந்து எழும் புகையால் பலர் மூச்சுதிணறல் பாதிப்புக்கு ஆளானதாக தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, சுற்று சூழல் பாதிப்படையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பல் பிடுங்கிய விவகாரம்... மனித உரிமை ஆணையத்தில் குவியும் புகார்கள்...
காவல் துறைக்கு புகார்

இந்த பகுதி மக்கள் காவல்துறைக்கு புகார் அளித்த பின், கடந்த சில தினங்களுக்கு முன் கழிவுகளை எரித்தவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அதன் பின்னரும் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதும், அதனை எரித்ததாகவும் இந்த பகுதியினர் புகார் அளித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அதனால் இந்த பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கழிவுகள் ஏற்றி வருவதை தடுத்து அதனை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி