ஆப்நகரம்

ஆண்களுக்கும் பஸ்சில் இலவசம்?; முதல்வர் ஆலோசிப்பதாக தகவல்!

அரசு பஸ்களில் இனி.. ஆண்களும் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்குவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த ஆண்களும் குஷியில் உள்ளனர்.

Samayam Tamil 23 Mar 2022, 3:47 pm
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வரும் பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக, அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யலாம் என்கிற அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil அரசு பஸ்சில் மக்கள் பயணம்
அரசு பஸ்சில் மக்கள் பயணம்



அதன்படி கடந்த ஜூலை 8ம் தேதி முதல் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

பீதியில் உறைந்த ரேஷன் ஊழியர்கள்; பதிவாளர் திடீர் உத்தரவு!
அந்த பயண சீட்டில் மகளிர் கட்டணம் இல்லா பயணச்சீட்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம் நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மிகவும் கண்ணியக் குறைவாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

அதே சமயம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஆண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபடி உள்ளது.

இந்நிலையில் இந்து தேசிய கட்சியின் சார்பில் நிர்வாகிகள், சிறுவர்கள் கையில் பஸ் போன்று கயிறு கட்டி விளையாடுவது போல நூதனமான முறையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து விசில் ஊதி, ஹாரன் சத்தம் எழுப்பி ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

வருவாய் ஊழியர்கள் ஷாக்; தமிழக அரசு அதிரடி திட்டம்!
அந்த மனுவில், அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியதுபோல ஆண்களுக்கும் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதற்கிடையே அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க பெண்களுக்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளதை போன்று, ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கலாமா? என முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்டமாக நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்லவும், அரசு தேர்வு எழுத மாணவர்கள் செல்லவும் அனுமதி வழங்க திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த ஆண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.

அடுத்த செய்தி