ஆப்நகரம்

நெல்லை காதல் திருமணம் - மகளை கடத்திய பெற்றோர்: தேடுதல் வேட்டையில் போலீஸ்!

கணவர் வீட்டில் இருந்த மகளை நீதிமன்ற உத்தரவை மீறி கடத்திய பெற்றோரை காவல்துறை தேடி வருகிறது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 17 Feb 2023, 3:51 pm
கூடங்குளம் அருகே காதலித்து திருமணம் செய்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரின் தந்தை உட்பட உறவினர்கள் கடத்தி சென்றனர். இது சம்பந்தமாக கூடங்குளம் போலீசார் பெண்ணின் தந்தை முருகேசன் உட்பட 12பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil nellai girl kidnapped


காதல் திருமணம்!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஸ்ரீ ரங்கநாராயணபுரம் அம்மன் கோவிலை தெருவை சார்ந்தவர் முருகன்(24). அதே தெருவை சேர்ந்த சுமிகா(19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 18ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து உள்ளனர். அதன்பின் ஜனவரி 25ஆம் தேதி தங்கள் காதல் திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆட்கொணர்வு மனு தாக்கல்!

இதற்கிடையே சுமிகாவின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனது மகளைக் காணவில்லை என ஆட்கொணர்வு மனு கொடுத்துள்ளார். இதனை அடுத்து கடந்த 30 ஆம் தேதி கூடங்குளம் போலீசார் சுமிகாவை மீட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜர் படுத்தினர்.

எடப்பாடிக்கு எப்படி கிடைத்தது இந்த பவர்? ஓபிஎஸ்ஸின் டெல்லி சோர்ஸ் காலி - ஆட்டத்தின் போக்கு மாறிய புள்ளி!

கணவருடன் அனுப்பி வைத்த நீதிமன்றம்!

அங்கு நீதிபதியின் முன்பு சுமிகா தான் திருமணம் செய்த கணவர் முருகனுடன் செல்வதாக தெரிவித்ததை அடுத்து நீதிமன்றம் சுனிகாவை கணவருடன் அனுப்பி வைத்தது. இந்த நிலையில் நேற்று அவர் தங்களது சொந்த ஊரான ஸ்ரீ ரங்க நாராயணபுரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

கடத்தப்பட்ட சுமிகா

அப்போது சுமிகாவின் தந்தை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 12 பேர் முருகன் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி சுமிகாவை இழுத்துச் சென்றுள்ளனர்.

வழக்கு பதிவு!

ஈரோடு கிழக்கு : கருத்துக் கணிப்பு முடிவு: யாருக்கு வெற்றி வாய்ப்பு? மக்கள் மனநிலை என்ன?

இது சம்பந்தமாக சுமிகாவின் கணவர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் சுமிதாவின் தந்தை முருகேசன், அவரது அம்மா பத்மா உறவினர்கள் தங்க முத்து, அமுதா, அனுசியா ,விஜயகுமார், செல்வகுமார், பாப்பா, தங்கம்மாள், வைகுண்ட மணி, பஞ்சு பழம் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி கணவர் வீட்டில் இருந்த சுமிகாவை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி