ஆப்நகரம்

நெல்லையில் 8 கோடியே 91 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு.. போலீஸ் கமிஷனர் அதிரடி!

நெல்லை மாநகர் பகுதியில் நில மோசடி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 8 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போன 25 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாக நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் அவிநாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 13 Dec 2022, 5:06 pm
நெல்லை மாநகர் பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி கைப்பற்றப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் நிலமோசடி தொடர்பான பெறப்பட்ட புகார்களின் மீது விசாரணை நடத்தப்பட்டு போலியாவணங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் உரையவர்களிடம் ஒப்படைத்தார்.
Samayam Tamil நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர் அவிநாஷ் குமார்



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார், "நெல்லை மாநகர் பகுதியில் நில மோசடி தொடர்பான புகார்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் அதன் மீது விசாரணை நடத்தி 8 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களின் போலி ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகர் பகுதியில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டு 25 லட்சத்து 19 ஆயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்பிலான 100 கைபேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும் டிரேடிங் ஆப் மூலமாகவும், கேஒய்சி அப்டேட் மூலமாகவும், அமேசான் பரிசு கூப்பன் உள்ளிட்டவைகள் மூலமாகவும் பணம் தருவதாக மோசடி நடத்தி வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழந்த 40 நபர்களின் ரூபாய் 48 லட்சத்து 99 ஆயிரத்து 196 ரூபாயை மீட்டுக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இணையதளம் மூலமாக 15 நபர்களிடம் பண மோசடி செய்த நபர்களின் வங்கிக் கணக்கில் ரூபாய் 32 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வங்கி கணக்குகளில் மோசடி நடந்தால் உடனுக்குடன் புகார்கள் தெரிவிக்க வேண்டும். காலதாமதமாக அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளது. மோசடி நபர்களால் எடுக்கப்பட்ட வங்கி கணக்குகளில் உள்ள பணம் அடுத்தடுத்த வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்து விடும் நிலை உள்ளது.

ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு - திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்!

சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகளவு பொதுமக்களால் கொடுக்கப்படுவதில்லை. பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி காவல் நிலையத்திலோ சைபர் கிரைம் தொடர்பான இலவச தொலைபேசி எண்ணிலோ உடனடியாக புகார் அளிக்க வேண்டும். நெல்லை மாநகரில் இந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடகையில் இந்த ஆண்டு கொள்ளை சம்பவங்கள் நெல்லை மாநகரில் பெருமளவு குறைந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறை, மது போதையில் வாகனம் இயக்குதல், அதிக வேகமாக வாகனங்களை இயக்குதல் இல்லாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு விடுமுறை தினத்தை பயன்படுத்தி பொதுமக்கள் இல்லாத வீடுகளில் கொள்ளை சம்பங்கள் நடைபெறுவதை தடுக்க இரவு ரோந்து பணி அதிகப்படுத்தப்பட்டு வழக்கத்தை விட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி