ஆப்நகரம்

நெல்லையப்பர் கோயில் வாசலில் பரபரப்பு: திருவிழா நடக்காது என அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயில் திருவிழா நடத்தப்படாது என நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது...

Samayam Tamil 29 Oct 2020, 2:28 pm
கொரோனா பெருந்தொற்று காரணமாக நெல்லையப்பர் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடத்தப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவைக் கண்டித்து கோயில் அலுவலகத்தின் வாசலில் மாவட்ட இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்தவர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil நெல்லையப்பர் கோயில் வாசலில் பரபரப்பு: திருவிழா நடக்காது என அறிவிப்பு!
நெல்லையப்பர் கோயில் வாசலில் பரபரப்பு: திருவிழா நடக்காது என அறிவிப்பு!


திடீர் போராட்டத்தையடுத்து மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை கமிஷ்னர் சதீஷ்குமார் விரைந்து வந்து பிரச்சினை குறித்து அங்கிருந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயில் திருவிழா மிகவும் பிரபலமானது. இந்தத் திருவிழாவைக் காண மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருவர். இத்தனை புகழைக் கொண்டுள்ள நெல்லையப்பர் கோயில் ஆண்டு திருவிழா இந்த முறை நடத்தப்படாது எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை ஏற்றுக் கொண்ட கோயில் பக்தர்கள், “மக்களை அனுமதிக்காமல் திருவிழாவை நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை ஒன்றை முன் வைத்து வருகின்றனர்.

எனினும் இந்தக் கோரிக்கை தொடர்பாகக் கோயில் நிர்வாகம் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நெல்லையப்பர் கோயில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை, தென்காசியில் குறையும் கொரோனா எண்ணிக்கை...

இதன் காரணமாகப் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்து முன்னணி அமைப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின்போது கோயில் நிர்வாகத்திடம் பேசி திருவிழா நடத்துவதற்குச் சாதகமாக முடிவெடுக்க வழிவகை செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு திருவிழா நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேவேளைத் திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக, இந்து அமைப்புகள் இப்போதைய நேரத்தில் கவனத்தை ஈர்க்க அதிகளவில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி