ஆப்நகரம்

கார்ப்பரேட் நிறுவங்களுக்காக பஞ்சமி நிலங்களை கையகப்படுத்துவதா? மக்கள் போராட்டம்!

350 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு சிப்காட் மூலம் வழங்க இருக்கும் முடிவை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 26 Jan 2023, 1:42 pm
நெல்லை மாவட்டம் அலவந்தான் குளம் கிராம மக்களுக்கு சொந்தமான 350 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு சிப்காட் மூலம் வழங்க இருக்கும் முடிவை எதிர்த்து குடியரசு தினவிழா கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் கருப்பு கொடி மற்றும் எதிர்ப்பு போஸ்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Samayam Tamil nellai


நெல்லை மாவட்டம் அலவந்தான் குளம் கிராமத்தில் வாழும் அரிஜன ஏர் உழவர் சமுதாய மக்களுக்காக வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் 350 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

இந்த 350 ஏக்கரை ஒரு லட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாற்றி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பல்லிக்கோட்டை, நெல்லை திருத்து, அலவந்தான் குளம் 3 கிராமத்திற்கான நீராதார கிணறுகள் 350 ஏக்கர் நிலப்பகுதிக்குள்தான் உள்ளது.

இந்த நிலையில் கங்கைகொண்டான் சிப்காட்டில் புதிதாக தொடங்கவுள்ள தனியார் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்காக 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அலவந்தான் குளம் கிராமத்தில் உள்ள அரிஜன ஏர் உழவர் சமுதாய மக்களுக்கு சொந்தமான 350 ஏக்கர் மேய்ச்சல் நிலங்களும் கையகப்படுத்துவதாக மக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் குடியரசு தின விழா: தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி டி.ராஜா
பல்லிக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அலவந்தான் குளம், நெல்லை திருத்து, பள்ளிக்கோட்டை 3 கிராமங்களிலும் ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தபட்சம் ஐந்து முதல் பத்து கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. மொத்தமாக ஒரு லட்சம் கால்நடைகளின் வாழ்வாதாரமாக 350 ஏக்கர் மேய்ச்சல் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அரசு சிப்காட் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் தொழிலை அழிக்கும் விதமாகவும், நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில்தான் குடியரசு தின விழாவை முன்னிட்டு அலவந்தான் குளம் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அலவந்தான் குளம், பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, ஆகிய நான்கு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கூட்டம் நடைபெற இருந்தது.
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
ஆனால் கிராம மக்களின் மேய்ச்சல் நிலத்தை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அலவந்தான் குளம் கிராம மக்கள் இன்று தொடங்கிய கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறினர். மேலும் கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்திலிருந்து வெளியேறி வந்த மக்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் போஸ்டர்களை ஏந்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி