ஆப்நகரம்

குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானை... பொதுமக்கள் பீதி

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று கடந்த ஒருவாரமாக சுற்றித் திரிகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 11 Aug 2020, 9:07 pm
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழகம் முழுவதும் சுற்றுலாத்தலங்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil wild


இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக தற்போது சீசன் களைகட்டி வருகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆனால் ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படாததால் அருவிக்கரைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதனால் குற்றாலம், ஐந்தருவி அருகில் வனப்பகுதியை ஒட்டி வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஐந்தருவி வெள்ளத்தில் காட்டுபன்றி ஒன்று அடித்துவரப்பட்டது,

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம்... பொதுமக்கள் கலக்கம்

இந்நிலையில் கடந்த ஒருவாரமாக குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள கரடி அருவிப்பகுதி, படகுகுளமான வெண்ணமடைக்குளம், குண்டர் தோப்பு ஆகிய பகுதிகளில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றித்திரிகிறது.

இதனை பொதுமக்களும் நேரில் கண்டுள்ளனர் . பொதுமக்கள் வசிக்கும் பகுதி மற்றும் தோட்டப்பகுதியில் ஒற்றை யானை சுற்றி சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக இந்த யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி