ஆப்நகரம்

இரவோடு இரவாக போடப்பட்ட சாலை.. காலையில் பள்ளம்.. செலவு 1.36 கோடியாம்..!

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பில் இரவில் போடப்பட்ட தார்ச்சாலை பகலில் அதன் திடத்தன்மை இழந்து தார் சாலை கற்கள் பெயர்ந்து பள்ளமானதால் பொதுமக்கள் அதிர்ச்சியுடன் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Samayam Tamil 10 Jan 2023, 7:18 pm
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகரமும் அறிவிக்கப்பட்டு கடந்த 2019 ம் ஆண்டு முதல் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் நெல்லை மாநகரத்தின் குடிதண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக மாநகரப் பகுதிக்கு கொண்டு வரும் அரியநாயகிபுரம் குடிநீர் திட்ட பைப் லைனுக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்ட பின்னும் அதன் மீது சாலைகள் புதிதாக அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
Samayam Tamil road laid nellai


இதேபோல் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்ட பின்னும் அந்த பகுதியில் சாலைகள் போடப்படவில்லை. இதன் காரணமாக நெல்லை மாநகரத்தில் மேலப்பாளையம் டவுண், பழைய பேட்டை, புதுப்பேட்டை, அபிஷேகப்பட்டி வரையிலும் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையிலும், சாலைகள் மிகவும் மோசமானதாக ஆபத்தை ஏற்படுத்தும் குழிகளுடன் நெடுஞ்சாலை காணப்படுகிறது இது குறித்து நெல்லை மாநகரில் குறிப்பாக மேலப்பாளையம் டவுண், பழைய பேட்டை பகுதிகளில் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்களால் நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், இன்று வரை சாலைகள் புதிதாக அமைக்கப்படவில்லை. தற்காலிகமாக கூட குண்டு குழியுமான சாலைகள் பராமரிக்கப்படவில்லை என வேதனையை தெரிவிக்கின்றனர் வாகன ஓட்டிகள்.

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான மேலப்பாளையம் நேதாஜி தெருவில் திங்கட்கிழமை இரவு 12 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமையான இன்று காலை 5 மணி வரை சாலை போடப்பட்டுள்ளது என்கின்றனர் பகுதி மக்கள். சாலை முறையாக போடாமல் ஏற்கனவே இருந்த சாலை மீது புதிய சாலை அமைத்து தினம் இல்லாத சாலையாக அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக இரவு போடப்பட்ட தார் சாலை, காலையில் பல இடங்களில் புதிய தார் சாலையின் கற்கள் பெயர்ந்து சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர் மாநகராட்சி ஆணையரும் நெடுஞ்சல் துறை அதிகாரியிடம் பேசி உனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சாலையில் பெயர்ந்திருக்கும் கற்களை கையில் அள்ளி தங்கள் புகார்களை தெரிவித்தனர் அப்பகுதி மக்கள். மேலும் இந்த பிரச்சனை குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனரிடம் கேட்டபோது, மேலப்பாளையம் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள சாலை முதற்கட்ட பணிகளை முடிந்துள்ளது மேலும் இதன் மீது இன்னொரு சாலை அமைக்கப்படும் அதன் பிறகு முழுமையாக திடத்தன்மை ஏற்படும் அதுவரை பொதுமக்கள் அந்த சாலையில் பயணிக்காமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் சேகர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி