ஆப்நகரம்

தடுப்பூசியை முதலில் மோடி போட்டால்தான் மக்கள் நம்புவார்கள்: காங்கிரஸ்!

கொரோணா தடுப்பூசி இந்திய விஞ்ஞானிகளின் வெற்றி அவர்களுக்கு வாழ்த்துகள். இதை எந்த அரசியல் கட்சியும் சொந்தம் கொண்டாடக் கூடாது என விருதுநகரில் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 17 Jan 2021, 10:21 pm
விருதுநகரில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது மாணிக்கம் தாகூர், தமிழகம் முழுவதும் மழை பெய்து நெல் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை வைப்பதாகத் தெரிவித்தார்.
Samayam Tamil தடுப்பூசியை முதலில் மோடி போட்டால்தான் மக்கள் நம்புவார்கள்: காங்கிரஸ்!
தடுப்பூசியை முதலில் மோடி போட்டால்தான் மக்கள் நம்புவார்கள்: காங்கிரஸ்!


மேலும் அவர், அமைச்சர் ஆர். பி உதயகுமாருக்குத் தமிழர்களின் பாரம்பரியம் உழவர்களின் பாரம்பரியம் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது, அவருக்குத் தெரிந்த பாரம்பரியம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்குவதும் அவரது கார் டயரின் விழுந்து வணங்குவதும் தான் என்ற விமர்சனத்தை முன் வைத்தார்.

தமிழக முதல்வர் பணத்தை நம்பி மட்டுமே அரசியல் செய்கிறார்கள் எனக் கூறிய காங்கிரஸ் எம்பி, தமிழர்களின் நலனுக்காக எதையும் செய்யாததால் தற்பொழுது பணத்தை நம்பி அரசியல் செய்து வருகிறார்கள் எனக் குற்றம் சாட்டினார். அப்போது மாணிக் தாகூர், ராகுல் காந்தி உதயநிதி ஸ்டாலின் சந்திப்பில் அரசியல் ஏதும் பேசவில்லை எனவும் ஜல்லிக்கட்டு பற்றித்தான் பேசப்பட்டது என்றும் விளக்கமளித்தார்.

தடுப்பூசி போட்டவர்கள் கதி என்ன?: சுகாதாரத்துறை விளக்கம்!

“கொரோனா தடுப்பூசி என்பது இந்திய விஞ்ஞானிகளின் வெற்றியாகும் அவர்களுக்கு வாழ்த்துகள். இதை எந்த அரசியல் கட்சியும் சொந்தம் கொண்டாடக் கூடாது. உலக நாடுகளில் பிரதமர்கள் தடுப்பூசியை முதலில் செலுத்திக் கொண்டது போல நம் நாட்டின் தடுப்பூசியைப் பிரதமர் மோடி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதால் அது மக்களுக்கு முன்னுதாரணமாக அமையும். நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்ற கருத்தைப் பிரதானமாக எம்பி முன் வைத்தார்.

அடுத்த செய்தி