ஆப்நகரம்

மின்வேலியில் மாட்டித் துடிதுடித்து உயிரிழந்த பெண் யானை: இடத்தின் உரிமையாளர் தப்பி ஓட்டம்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் அருகே பொட்டல் குண்டு என்ற இடத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று மின்வேலியில் மாட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 11 Dec 2020, 1:57 pm
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே அனவன் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்லகுட்டி . இவர் பாபநாசம் பகுதி கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பொட்டல் குண்டு பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்.
Samayam Tamil மின்வேலியில் மாட்டித் துடிதுடித்து உயிரிழந்த பெண் யானை: இடத்தின் உரிமையாளர் தப்பி ஓட்டம்!
மின்வேலியில் மாட்டித் துடிதுடித்து உயிரிழந்த பெண் யானை: இடத்தின் உரிமையாளர் தப்பி ஓட்டம்!


இந்த விளை நிலங்களில் வன விலங்குகள் புகுந்து நாசம் செய்யாமலிருக்கவும் பயிர்களைப் பாதுகாப்பதாகவும் நினைத்து, நிலத்தைச் சுற்றி வனத்துறை அனுமதி இன்றி மின்வேலி வைத்துள்ளார்.

இந்த சூழலில் வியாழக் கிழமை இரவு உணவு தேடி வந்த யானைக் கூட்டம் அந்த வயல் வெளி அருகே வந்துள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி சுமார் 30 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை மின்வேலியை தன் தும்பிக்கையால் தொட்ட நிலையில் அதன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.

வெள்ள அபாயம் இல்லை... நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்?

இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மனோகர் தலைமையில் உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன்பின் யானையின் உடலைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று புதைத்தனர்.

வனத்துறை அனுமதி இல்லாமல் மின் வேலி அமைத்த இடத்தின் உரிமையாளர் செல்லகுட்டியை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி