ஆப்நகரம்

28 ஆண்டுகால சிறைக் கைதிகளை விடுதலை செய்க... நெல்லையில் போராட்டம்

மேலும் ​​உத்தரபிரதேசத்தில் மனிஷா என்ற தலித் பெண்மணியை கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட கோரியும் போராட்டம் நடத்தப்பட்டது.

Samayam Tamil 31 Oct 2020, 5:47 am
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட கோரியும் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரியும் தென்காசியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil prisoner


தென்காசி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கையா 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கோவை பாட்ஷா பாய் மற்றும் 23 சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் உத்தரபிரதேசத்தில் மனிஷா என்ற தலித் பெண்மணியை கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில் குற்றவாளிகளை தூக்கிலிட கோரியும், அதில் உண்மை செய்தியை வெளியில் கொண்டுவரும் பத்திரிக்கையாளர்கள் தொடர்ச்சியாக மிரட்டப்படுவது மற்றும் தாக்கப்படுவதை கண்டித்தும், இந்த் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

மாணவிக்கு ஆபாசச் செய்தி அனுப்பிய ஆசிரியர்: 9 வருடம் கழித்து போக்ஸோ!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது யாகூப் மாநில செயலாளர் மைதீன் சேட் கான். மாநில செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான்;. முஹம்மது ராசப்பா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்

அடுத்த செய்தி