ஆப்நகரம்

மக்களே உஷார்... மாஸ்க் அணியாமல் சென்றால் கடும் அபராதம்!

நெல்லை மநாகர பகுதியில் மாஸ்க் அணியாத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் தலா 200 ரூபாய் அபராதம் வசூலித்து வருகின்றனர்.

Samayam Tamil 11 Jan 2022, 10:52 pm
நெல்லை மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தடுப்பூசி போடும் பணிகள் மும்மரமாக நடந்து‌ வருகிறது.
Samayam Tamil மக்களே உஷார்... மாஸ்க் அணியாமல் சென்றால் கடும் அபராதம்!


அதேபோல் முககவசம் அணியாதவர்களையும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் இடையே மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் சுகாதார பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

திகிலுடன் தேர்வு எழுதும் மாணவர்கள்; திடீர் கட்டுப்பாடு விதிப்பால் திகைப்பு!
அப்போது முககவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அதேபோல் கொரனோ தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த வழியாக சாலையில் சென்றவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்தும், முககவசம் அணிவதன் அவசியம் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அடுத்த செய்தி