ஆப்நகரம்

ஊழியர்கள் திடீர் முடிவு; ஊராட்சி பணிகள் பாதிப்பு!

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Samayam Tamil 11 Jan 2022, 3:41 pm
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தினர்.
Samayam Tamil வெறிச்சோடிய அலுவலகம்
வெறிச்சோடிய அலுவலகம்


இந்த போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காத நிலையில் இன்று மாநிலம் தழுவிய அளவில் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்வரை கவர்ந்த பரோட்டா; மதுரையில் போட்டாப் போட்டி!

நெல்லை மாவட்டத்தில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணி செய்பவர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து சுமார் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜேந்திர பாலாஜி ஷாக்; அடுத்தடுத்து பேட் நியூஸ்!

இதனால், பாளையங்கோட்டை உள்ளிட்ட அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. மேலும் இந்த வேலைநிறுத்த பேராட்டத்தால் பெரும்பாலான ஊராட்சிகளில் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி