ஆப்நகரம்

நெல்லை மக்களுக்கு குட் நியூஸ்! 6 மாதங்கள் கழித்து இயக்கப்பட்ட விரைவு ரயில்

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லையில் இருந்து சென்னை செல்லும் தினசரி ரயிலான நெல்லை விரைவு ரயில் இன்று மீண்டும் பயணிகளுக்கான சேவையை தொடங்கி உள்ளது.

Samayam Tamil 2 Oct 2020, 10:25 pm
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. திருச்சிராப்பள்ளியில் இருந்து நாகர்கோவில் செல்லும் இன்டர்சிட்டி உள்ளிட்ட சில ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனையடுத்து கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அந்த ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
Samayam Tamil file pic


இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில் கடந்த 15 தினங்களுக்கு முன்பிருந்து இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தொழில் நிமித்தமாக சென்னையில் உள்ளனர்.

இவர்கள் வாரந்தோறும் நெல்லை வந்து செல்வது வழக்கம் எனவே நெல்லையில் இருந்து சென்னை செல்லும் தினசரி ரயிலான நெல்லை விரைவு ரயிலை இயக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றி தென்னக ரயில்வே நெல்லை விரைவு ரயிலை இயக்க முடிவு செய்து 6 மாதங்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் நெல்லை விரைவு ரயில் இயக்கப்படுகிறது.


நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு புறப்பட்டு சென்றது. முதல் நாள் என்பதால் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் ரெயில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர் . அவர்களும் ஒரு மணிநேரத்திற்கு முன்பாக ரெயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு முககவசம் அணிந்த பின்பே ரயில் ஏற அனுமதித்தனர்.

கலெக்டர் ஆபீசை கலக்கி எடுக்கும் நல்லப் பாம்பு

நெல்லை விரைவு ரயில் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மக்கள் மற்றும் ரயில் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படிப்படியாக நெல்லை வழியாக செல்லும் அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் 6 மாத காலத்திற்கு பின் நெல்லை விரைவு ரயில் இயக்கப்பட்டதற்கு ரயில் பயணிகள் சங்கம் மக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்

அடுத்த செய்தி