ஆப்நகரம்

நெல்லை மக்களுக்கு செம தகவல்; முதல்வர் போட்ட..அதிரடி உத்தரவு!

நெல்லை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Samayam Tamil 3 Dec 2021, 6:49 pm
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கடந்த திமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் நம்பி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil அப்பாவு
அப்பாவு



இந்த அணை 22.96 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது பெய்த மழையில் அணை நிறைந்து உபரிநீர் சுமார் 4700 கனஅடி வரை வெளியேறி வருகிறது. இதனால் ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இதனால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளிகளுக்கு திடீர் உத்தரவு; துள்ளி குதிக்கும் மாணவிகள்!

நம்பியாறு அணை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்டது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இந்த பகுதியில் 5 கோடியே 22 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பாலம் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

திமுகவினர் திடீர் தகராறு; அமைச்சர் அதிர்ச்சி!

இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும் நிலையில், ஓராண்டு காலத்திற்குள் பாலம் கட்டும் பணி முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஷ், ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி