ஆப்நகரம்

டாஸ்மாக் மேலாளர் படுகொலை... பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்

பட்டப்பகலில் வீடு புகுந்து டாஸ்மாக் மேலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Aug 2020, 9:44 pm
தென்காசி மாவட்டம். சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன்(50). இவர் இடைகால் அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.

இவர் தற்போது சாம்பவர்வடகரை கிராமம் அக்ரஹாரம் தெருவில் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும்,
விஸ்வதீபக் (15), வினிஸ் தீபா (12) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மனைவி, மகன்கள் வடமலாபுரத்தில் உள்ளனர். முத்துப்பாண்டி மட்டும் வேலைக்கு சென்று விட்டு சாம்பவர்வடகரையில் உள்ள வீட்டில் இருந்து வந்தார். வழக்கம்போல் நேற்று பணிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தவர், காலையில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததாகத் கூறப்படுகிறது.

நீரில் மூழ்கிய 5 ஏக்கர் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

அப்போது வீட்டில் தண்ணீர் மோட்டார் ஒடிய சத்தத்துடன், முத்துப்பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு ரத்த வெள்ளத்தில் முத்துபாண்டி பிணமாக கிடந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் கள்ளகாதல் விவகாரத்தில் கொலை நடந்ததா, இல்லை சொத்துக்காக கொலை நடந்தா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை... 5 ஆண்டு பகைதான் காரணமா?

அத்துடன் கொலை செய்த மர்ம கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி