ஆப்நகரம்

நெல்லை: 48 மணி நேரத்தில் ஒரே பள்ளியில் 56 மாணவருக்கு காய்ச்சல், பெரும் பதற்றம்!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தை அரசு மேல்நிலை பள்ளியில் 26 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பள்ளியின் பிற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடயே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Sep 2021, 10:16 pm
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தையில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 450 மாணவர்கள் பயில்கின்றனர். கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து தமிழ்நாடு அரசு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளியினை திறக்க அனுமதி அளித்துள்ளது. அரசு உத்தரவுகள்படி பள்ளிகளுக்கு மாணவர்கள் சுழற்சி முறையில் சென்று வருகின்றனர்.
Samayam Tamil நெல்லை: 48 மணி நேரத்தில் ஒரே பள்ளியில் 56 மாணவருக்கு காய்ச்சல், பெரும் பதற்றம்!


இந்த சூழலில் மாறாந்தை அரசு மேல்நிலைப் பள்ளியின் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களில் 26 பேருக்கு நேற்று ஒரே நாளில் காய்ச்சல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடனடியாக தகவல் அறிந்த சுகாதாரத் துறையினர் நேரில் சென்று மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டனர்.

பரிசோதனையின் முடிவு இன்னும் வராத நிலையில் இன்று மேலும் 30 மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் இன்றும் கொரோனா பரிசோதனை மாணவர்களுக்கு எடுக்கப்பட்டது. மேலும் மாணவர்களிடையே மருத்துவர்கள் நேரில் சென்று எவ்வாறு கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எவ்வித அச்சமும் தேவையில்லை என்றும் பரப்புரைகளை சொல்லி வருகின்றனர்.


அடுத்தடுத்து மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் கொரோனா 3ஆம் அலை பரவலா என்ற அச்சம் தென்காசி மாவட்டத்தின் பிற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி