ஆப்நகரம்

குழந்தைகளுக்கு உதவித்தொகை; கலெக்டர் சூப்பர் அறிவிப்பு!

குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கபப்டுவதாக் கலெக்டர் அறிவித்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 29 Jan 2022, 4:38 pm
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனாவால் தமிழகம் முழுவதும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டது.
Samayam Tamil தென்காசி கலெக்டர்
தென்காசி கலெக்டர்



இந்நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி அவர்களுடைய வாழ்க்கைக்கு உத்தரவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆடிப்போய் கிடக்கும் அதிமுக; பீதி கிளப்பிய டெல்லி உத்தரவு!

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்து அவர்கள் 18 வயது முடிவு பெறும்போது வட்டியோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேபோன்று கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணமாக ரூ.3 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டிஜிபி சைலேந்திர பாபு டென்ஷன்; போலீசுக்கு பறந்தது திடீர் உத்தரவு!

அந்தவகையில் தென்காசி மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர் அல்லது அவர்களில் ஒருவரை இழந்த 220 குழந்தைகள் இதுவரையிலும் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் அனைவருடைய ஆவணங்களும் சரி பார்த்து நிவாரண உதவித் தொகைக்கான காசோலை, வங்கி வைப்புத்தொகை சான்றுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அசிங்கப்படுத்திய அமைச்சர்.. வெடிக்கும் விடுதலை சிறுத்தைகள்!

இதன் முதல்கட்டமாக 63 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி