ஆப்நகரம்

அறுவடைக்குத் தயாரான நிலையில் இப்படி ஒரு சோகம்: கதறும் விவசாயிகள்!

தென்காசி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மானாவாரி விவசாய பயிர்கள் அனைத்தும் தற்போது பெய்த கனமழையால் நீரில் மூழ்கி மீண்டும் முளைத்ததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 17 Jan 2021, 8:06 pm
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வீரகேரளம்புதூர், திருவேங்கடம், சிவகிரி, ஆலங்குளம் உள்ளிட்ட தாலுகாக்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் மானாவாரி விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன.
Samayam Tamil அறுவடைக்குத் தயாரான நிலையில் இப்படி ஒரு சோகம்: கதறும் விவசாயிகள்!
அறுவடைக்குத் தயாரான நிலையில் இப்படி ஒரு சோகம்: கதறும் விவசாயிகள்!


அதாவது உளுந்து, பாசிப் பயறு மக்காச்சோளம், சோளம், தட்டாம் பயிறு உள்ளிட்ட பயிர்களைப் பயிரிட்டு விவசாயம் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் ஏற்கனவே பருவமழை காலத்தில், காலம் கழிந்து மழை பெய்த நிலையில் விவசாயிகள் தாமதமாகப் பயிர்களைப் பயிரிட்டு விவசாயத்தைச் செய்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரக் காலமாகப் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் தற்போது அந்த பயிர்கள் மீண்டும் முளைத்து வருவதைக் கண்ட விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நெல்லை வெள்ளம்... 63 வீடுகள் இடிந்து நாசம்

நீரில் மூழ்கி வீணான பயிர்களுக்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீரகேரளம்புதூர் தாலூகா பலபத்திரராமபுரம், திருவேங்கடம் தாலுகா கே. ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

அடுத்த செய்தி