ஆப்நகரம்

வரலாறு காணாத நூல் விலை ஏற்றம்: குமுறும் தொழிலாளர்கள்!

வரலாறு காணாத நூல் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Samayam Tamil 22 Jan 2021, 6:10 pm
விசைத்தறி தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் காரணமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது.
Samayam Tamil tenkasi sewing labour protest due to increase in thread price
வரலாறு காணாத நூல் விலை ஏற்றம்: குமுறும் தொழிலாளர்கள்!


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 9ஆம் மாதம் நெசவு செய்வதற்கான இயந்திரங்களுக்கு நூலின் விலையானது ரூபாய் ஆயிரத்து 455 என்ற நிலையிலிருந்தது. இந்த விலை தற்போது கடுமையாக உயர்ந்து ரூபாய் ஆயிரத்து 845 ஆக உள்ளது.

திருநெல்வெலி என்று பெயர் வந்தது ஏன்? நெல்லையப்பர் செய்த விளையாடல்

இந்த நூல் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டி விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாததால் இன்று ஒரு நாள் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவில் பகுதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சிஐடியு செயலாளர் கருமலையான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் காரணமாக சங்கரன்கோவில் நகர்ப் பகுதியில் விசைத்தறிக் கூடங்கள் அனைத்தும் இயங்கவில்லை . இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி