ஆப்நகரம்

தென்காசி; லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கண்காணிப்பாளர்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ராசுப்பிரமணியன் என்பவர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பிறகு அரியர் தொகையை கேட்ட பொழுது பத்தாயிரம் லஞ்சமாக கேட்ட அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் தெரிவித்தார்

Samayam Tamil 17 May 2023, 9:58 am

ஹைலைட்ஸ்:

  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம்

  • அரியர் தொகை வழங்க பொழுது 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட அதிகாரி

  • லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்த பணியாளர்

  • அதிகாரியை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அதிகாரியை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்
அதிகாரியை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருபவர் ராமசுப்பிரமணியன். மேலும் இவர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த பணியாளராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், தற்போது பணி நிரந்தரம் பெற்று குற்றாலம் குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணியாற்றி வருகின்றார்.
அரியர் தொகை வழங்க லஞ்சம் கேட்ட சீனிவாசன்
இந்நிலையில், இவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய வந்தபோது இவருக்கு வழங்க வேண்டிய அரியர் தொகையான ரூ.3 லட்சத்து, 93 ஆயிரத்து 700 ரூபாயை வழங்குவதற்காக, குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சீனிவாசன் என்பவர் இவரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

நெல்லை; மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாங்குநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள்!

ரூ 1௦,000 கொடுத்தால் மட்டுமே அரியர் பணம்
அதற்கு ராமசுப்பிரமணியன் தன்னிடம் பணம் இல்லை எனவும் தன்னுடைய குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது அதனால் தனக்கு வரவேண்டிய தொகையை மீட்டு தந்தால் பெரும் உதவியாக இருக்கும் என ஸ்ரீனிவாசனிடம் பலமுறை கேட்டும் அவர் பணம் கொடுத்தால் மட்டுமே உன் பணம் உனக்கு கிடைக்கும் என அதிகாரமாக பல நாட்களாக கூறி வந்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார்
இந்நிலையில் ராமசுப்பிரமணியன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி ராமசுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை ஸ்ரீனிவாசனிடம் கொடுத்துள்ளார்.

அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர்
அதனை தொடர்ந்து மறைந்திருந்த தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையிலான 6 பேர் கொண்ட போலீசார் ரசாயணம் தடவிய நோட்டுகளுடன் ஸ்ரீநிவாசனை கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருக்கு சொந்தமான பணத்தை கொடுப்பதற்காக உயர் அதிகாரி லஞ்சம் கேட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி