ஆப்நகரம்

உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்: தேடிவந்த விருது!

துணிச்சலுடன் விரைவாக செயல்பட்டு ஒருவரது உயிரைக் காப்பாற்றிய இரு தீயணைப்பு வீரர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது.

Samayam Tamil 15 Sep 2020, 6:19 am
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வீரதீர செயல் புரிந்தோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil firefighters


திருநெல்வேலியில் ஆகஸ்ட்15ம் தேதி காலை கணேசன் என்பவர் சேவியர் காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அவரது நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் பறித்துக்கொண்டதாக குற்றம் சாட்டிய அவர், அதனை மீட்டுத்தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். ஆனாலும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால் நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

TN School Reopen: தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் - இந்த வருஷம் செம ஈஸி போங்க!

இந்தத் தகவல் தீயணைப்பு வீரர்களுக்கு சொல்லப்பட அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் துணிச்சலுடன் மிக விரைவாக செயல்பட்டு கணேசன் உயிரைக் காப்பாற்றினர்.

தாலியைக் கழட்டிவிட்டு நீட்த் தேர்வு, தமிழ்நாட்டில் சர்ச்சை!

இந்த செயலுக்கு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வீரதீர செயல் புரிந்ததற்கான விருது மற்றும் வெகுமதிக்கு தீயணைப்பு அலுவலர் வீரராஜ், வீரர் செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி