ஆப்நகரம்

களேபரமான நெல்லை கலெக்டர் ஆபிஸ்: அடுத்தடுத்து இருவர் தீக்குளிக்க முயற்சி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மட்டும் இருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 19 Dec 2022, 2:27 pm
13 ஆண்டுகளாக ரேஷன் கார்டு வழங்காமல் அலைக்கழித்து வருவதாக கூறி மரிய சிங்கம் என்பவரும், 30 வருடங்களாக நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாரியப்பன் என்பவரும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அடுத்தடுத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil suicide attempt


திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய சிங்கம். இவருக்கு சாரதா என்ற மனைவியும் ரோஜா என்ற மகளும் உள்ளனர். மனைவி உயிரிழந்து உள்ள நிலையில் மகள் ரோஜா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அன்றாட வாழ்க்கையை நடத்த தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்திருக்கிறார்.

குறிப்பாக கடந்த 13 ஆண்டுகளாக தனக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சரின் தனி பிரிவிற்கும் தனது கோரிக்கையை மனுவாக அளித்துள்ள மரிய சிங்கம் தொடர்ந்து தான் அலை கிழிக்கப்பட்டு வருவதாக கூறி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் திடீரென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அலகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? கலெக்டர் பரிசீலிக்க உத்தரவு!
கடந்த 1992ஆம் ஆண்டு முதல் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று மனு அளித்து வருவதாகவும் ஆனால் இதுவரை தனது நிலத்தை மீட்டு தர தனது மனு மீது துளி அளவு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் சூப்பர் முடிவு?
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் மண்ணெண்ணெய் ஊற்றி திக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி