ஆப்நகரம்

பிரபல தொழிலதிபர் கருமுத்து தியாகராஜ செட்டியாரின் நிலம் அபகரிப்பு; தென்காசி சார்பதிவாளர் உட்பட 4 பேர் கைது!

தென்காசியில் பிரபல தொழிலதிபரின் நில மோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Sep 2022, 10:48 am

ஹைலைட்ஸ்:

  • மதுரையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து தியாகராஜ செட்டியார்
  • இவருக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்த சார்பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் கைது
  • 2 பேருக்கு‌ போலீசார் வலைவீச்சு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சார்பதிவாளர் மணி
மதுரையைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமம் பழைய குற்றாலம் பகுதியில் உள்ளது. இதனை குடும்பத்தினருக்கு பிரித்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இவரது மகள் லலிதா என்பவரது பெயரில் ஒரு ஏக்கர் 75 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பராமரிக்காமல் அப்படியே வைத்துள்ளனர். இந்த நிலையில் அவரது வாரிசான லலிதா பெயரில் இருந்த அந்த நிலத்தை அபகரிக்க போலியாக லலிதா என்ற ஒருவரை தயார் செய்துள்ளனர்.


கருமுத்து தியாகராஜ செட்டியார் வாரிசு என்பதற்கு லலிதாவுக்கு வாரிசு சான்று மற்றும் அவருடைய இறப்பு சான்று ஆகியவற்றையும் தயார் செய்து இந்த நிலத்தை சுரண்டையை சார்ந்த பவுன்ராஜ், தென்காசியை சேர்ந்த முகமது ரபிக் மற்றும் சோமசுந்தர பாரதி ஆகிய மூன்று பேருக்கும் கருமுத்து தியாகராஜ செட்டியார் மனைவி பத்மாவதியின் மகள் லலிதா தென்காசி எண். 1 சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பத்திரபதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நிலத்தின் உண்மையான உரிமையாளரான கருமுத்து தியாகராஜ செட்டியாருடைய மகள் லலிதா என்பவர் திருச்சியிலிருந்து வந்து தென்காசியில் வந்து இடத்தை பார்த்தபோது தனது நிலம் வேலி போடப்பட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்து தனது நிலம் அபகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக தென்காசி மாவட்ட காவல்துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்; வெளியான பரபரப்பு வீடியோ.. போலீஸ் அதிரடி நடவடிக்கை!

புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் உத்தரவின்பேரில் நில தடுப்பு உதவி கண்காணிப்பாளர் தெய்வம் மற்றும் ஆய்வாளர் சாந்திசெல்வி ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் நில மோசடி நடைபெற்றது உறுதியானது.

இதன் தொடர்ச்சியாக தென்காசி எண். 1 பத்திரப் பதிவு அலுவலக பதிவாளர் மணி, நிலத்தை எழுதி வாங்கிய சோமசுந்தர பாரதி, சாட்சி கையெழுத்திட்ட வடிவேல், தனசீலன் ஆகிய 4 நபர்களும் கைது செய்யப்பட்டனர். தென்காசியில் போலியான ஆவணங்களை தயாரித்து நிலத்தை மோசடி செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி