ஆப்நகரம்

சகதியாய் கிடக்கும் சாலை... நாற்று நட்டு கலாய்த்த பொதுமக்கள்

சரி செய்ய அப்பகுதி மக்கள் சார்பாக கீழப்பாவூர் யூனியனின் அலுவலர்களுக்கு மனு அளித்துள்ளனர். தேங்கி நிற்கும் பள்ளத்தை மூடுகின்றோம் என்ற பெயரில் சகதி மணல்களை தெரு முழுவதும் பரப்பியுள்ளனர்.

Samayam Tamil 6 Jan 2021, 8:17 pm
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
Samayam Tamil நாற்று நடும் மக்கள்


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல் குளத்தில் சுமார் 800க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் ராஜா நகர் தெரு பகுதியில் மட்டும் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தெருவில் சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சிமெண்ட் சாலை பள்ளமாக காணப்பட்டதால் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் சார்பாக கீழப்பாவூர் யூனியனின் அலுவலர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

எல்லாம் கமிஷன்... அதிமுக திட்டங்களை வெளுத்து வாங்கிய கமல்

ஆனால் தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளத்தை மூடுகின்றோம் என்ற பெயரில் சகதி மணல்களை தெரு முழுவதும் பரப்பியுள்ளனர். தற்போது ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் தேங்கியும் சேறும் சகதியுமாக மழைநீர் வடிவதற்கு வடிகால் வசதியும் இல்லாததால் பொதுமக்கள் நடப்பதற்கு பெரும் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து கீழப்பாவூர் யூனியன் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நூதன முறையில் சேறும் சகதியுமாக காட்சி அளித்த தெருக்களில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி