ஆப்நகரம்

சுதந்திர தினம்: தந்தை இறந்தும் அணிவகுப்பு நடத்திய காவல் ஆய்வாளர்

பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்வதில் தவறவில்லை என்பதை அறிந்த அதிகாரிகள் அனைவரும் வியப்புற்றனர்.

Samayam Tamil 15 Aug 2020, 5:23 pm
74ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்வதில் தவறவில்லை என்பதை அறிந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil tirunelveli police conducted independence day march even though her father died
சுதந்திர தினம்: தந்தை இறந்தும் அணிவகுப்பு நடத்திய காவல் ஆய்வாளர்


நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இந்த அணிவகுப்பை தலைமையேற்று நடத்தினார் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி.



மகேஸ்வரி அவர்களின் தந்தை நாராயணசுவாமி ( வயது 83 ) நேற்று இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை புறப்பட இருந்தார. ஆனால் திடீரென்று சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு நடத்துவதற்கு திடீர் என்று ஒருவரை மாற்றியமைக்க முடியாது என்ற சூழ்நிலையில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை முடித்து உடனடியாக தனது தந்தை உயிரிழந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.

கொரோனா: மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் உலக சுகாதார நிறுவனம்!

எந்த வகையிலும் குறைவின்றி அணிவகுப்பு நிகழ்த்திய பிறகுதான் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் கம்பீரமான அந்த காவல் அதிகாரியை ஆறுதல் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.



காவல் ஆய்வாளர் மகேஸ்வரியின் கணவர் பாலமுருகன் நெல்லை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு காவலராக இருக்கிறார். இவர் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணியை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு வந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி