ஆப்நகரம்

நெல்லை: ரூ.120ஐத் தொட்ட சின்ன வெங்காயம்... மற்ற காய்கறிகள் விலை என்ன?

நெல்லை உழவர் சந்தையில் காய்கனிகள் விலை நிலவரம் இன்று

Samayam Tamil 31 Oct 2020, 8:47 am
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 72 முதல் ரூ. 76 வரையும் சின்ன வெங்காயம் ரூ. 100 முதல் ரூ. 120 வரையும் விற்கப்படுகிறது. இதன் காரணமாகக் குறைந்த அளவிலே வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதே போல, சின்ன வெங்காய விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
Samayam Tamil vegetables


அதேபோல் கத்திரிக்காய் கிலோ ரூ. 20 முதல் ரூ. 28 வரையும், வெண்டைக்காய் ரூ. 20க்கும், புடலங்காய் ரூ. 34க்கும், தக்காளி ரூ. 18க்கும், அவரைக்காய் ரூ. 28, முருங்கைக்காய் ரூ. 48, பூசனிக்காய் ரூ. 12, கோவைக்காய் ரூ. 50, புதினா ரூ. 50, கறிவேப்பிலை ரூ. 30, கொத்தமல்லி ரூ. 20க்கும் விற்கப்படுகின்றன.

பெரும்பாலான கீரை வகைகள் கட்டு ரூ. 10க்கு விற்கப்படுகிறது. வாழைப்பூ, வாழைத்தண்டு தலா ரூ. 10க்கும், வாழை இலைக் கட்டு ரூ. 25க்கும் விற்கப்படுகிறது.

தாமிரபரணியை அழிக்காமல் விடமாட்டீங்க போல...”


மேலும் பீட்ரூட் ரூ. 40, முட்டைகோஸ், காலிப்ளவர் ரூ. 48ற்கும் விற்கப்படுகிறது. வெங்காயத்தைத் தவிரப் பிற காய்கறி விலைகளின் நிலவரம் மக்களைச் சற்று ஆறுதல் அளிக்கும் வகையிலே உள்ளது எனக் கருத்து பதிவாகியுள்ளது.

வெங்காய உற்பத்தி செய்யும் மாநிலங்களில், இன்னும் மழைப் பொழிவு தொடர்ந்தால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து இதே நிலையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கருதப்படுகிறது.

இதற்கிடையே மாவட்டத்தில் சில வெங்காய மொத்த வியாபாரிகள், வெங்காயத்தைப் பதுக்கி வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்க மாநகர அதிகாரிகள் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

அடுத்த செய்தி