ஆப்நகரம்

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறக்காவிட்டால்... எச்சரிக்கை விடுத்த வணிகர்கள்!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் திறக்கப்படாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 13 Apr 2023, 10:41 am
நெல்லையின் முக்கிய வணிக தளமாக சந்திப்பு பேருந்து நிலையம் இருந்து வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
Samayam Tamil nellai vendors protest
nellai vendors protest


வணிகர்கள் போராட்டம் அறிவிப்பு

இந்நிலையில், கடந்த 2018 ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளாக நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் திறக்காபடாததால் ஆயிரக்கணக்கான வணிகர்கள் தங்களுடைய வாழ்வாதரத்தை இழந்துள்ளனர். மேலும் பேருந்துகள் இந்த பகுதிக்கு வராததால் பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, நெல்லை சந்திப்பு வணிகர்கள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் வரும் 18 ம் தேதி நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. வணிகர்கள் தங்களது கடைகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் மீண்டும்... புதிய மாற்றத்தை வரவேற்கும் பயணிகள்!
உடனடியாக திறக்க வலியுறுத்தல்

மேலும், அடுத்தக்கட்டமாக வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவது, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் பணிகள் முடிவுற்றபோது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை இருப்பதால் அதனை திறப்பதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தை நம்பியுள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த பேருந்து நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி