ஆப்நகரம்

சிவன்மலையில் புதிய ஒளி; முருக பக்தர்கள் நெகிழ்ச்சி!

சிவன்மலை முருகன் கோயிலில் சுடர் விட்டு எரிந்த புதிய ஒளியை கண்டு பக்தர்கள் மனமுருக வழிபட்டனர்.

Samayam Tamil 6 Dec 2022, 7:43 pm
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே அமைந்துள்ளது சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோவில். இக்கோயில் காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
Samayam Tamil sivanmalai


இந்த கோயிலானது அருணகிரி நாதரால் பாடல்பெற்ற தலமாகும். வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக, இங்கு ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது மிகவும் பெருமை வாய்ந்த ஒன்றாக பக்தர்கள் கருதுகின்றனர்.

சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி, அதை கோவில் முன் உள்ள மண்டப தூணில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

பற்ற வைத்த திருச்சி சூர்யா; பாஜகவில் பரபரப்பு; பாகம்-1

உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால், சுவாமியிடம் பூக்கேட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில், அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பற்ற வைத்த திருச்சி சூர்யா; பாஜகவில் பரபரப்பு; பாகம்-2

கார்த்திகை தீபம், என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும், கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

இதனை முன்னிட்டு சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 6 மணிக்கு விழா பூஜை நடந்து 8.30 மணிக்கு காலசாந்தி பூஜை நடந்தது.

இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி உள் பிரகாரத்தில் வலம் வந்தார்.

சட்டென மாறிய பாஜக; ஓபிஎஸ் டென்ஷன்; முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

இதன் பிறகு கோபுர நுழைவு வாயிலில் உள்ள தீப கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது. அப்போது முருக பக்தர்கள் அரோகரா கோஷம் போட்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின்பு சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்கராத்தில் கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

இதேப் போல் காடையூர் காடேஸ்வரர் கோயில், பாப்பினி பெரிய நாயகியம்மன் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோயில் உள்ளிட்ட காங்கயம் வெள்ளகோவில் சுற்றி உள்ள அனைத்து கோயில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

ஓபிஎஸ் மெரினா ஆபரேஷன்; விடிய விடிய போட்ட ப்ளான்!

இது தவிர பொதுமக்கள் தங்களின் வீடுகளிலும் அகல்விளக்குகளை ஏற்றிவைத்து வழிபட்டனர். இதே போல் நாளை மாவட்டத்தில் மிக பழமையானதும், பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேசுவரர் கோவிலில் லட்சத்து எட்டு தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற உள்ளது.

அடுத்த செய்தி