ஆப்நகரம்

திமுக பிரமுகரை அவதூறு செய்தி, ஆட்சியில் இருக்கும்போது விடுமா போலீஸ்!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைதளத்தில திமுக நிர்வாகி பற்றி தவறான பதிவு செய்த நபரை கைது செய்த காவல் துறையினர்.

Samayam Tamil 14 Oct 2021, 9:46 pm
சமூக வலைதளத்தில் தளத்தில் திமுக நிர்வாகி பற்றி தவறான பதிவு செய்த ஒரு நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil திமுக பிரமுகரை அவதூறு செய்தி, ஆட்சியில் இருக்கும்போது விடுமா போலீஸ்!


திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி. இவரது குடும்பத்தை பற்றி வேறு ஒருவரின் போட்டோவை வைத்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை கடந்த வாரத்தில் பதிவிட்டு இருந்தனர். இது குறித்து காங்கேயம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம் தலைமையில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதில் இது பொய்யான தகவல் இதனால் இரு சமூகத்திற்கும் இடையே பிரச்சினை தூண்டுகிறார். வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது.

காசுக்காக கர்ப்பிணியை கொல்ல பார்த்த அரசு மருத்துவர்: திருப்பூரில் பெரும் கொடுமை!
எனவே இந்த தவரான தகவலை பகிர்ந்த நபரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் சைபர் க்ரைம் போலீசார், மர்ம நபரை தேடிவந்தனர்.

இதில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த சந்திரசேகர்(51) என்பவர் தவறான பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் சந்திரசேகரை கைது செய்து, காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி