ஆப்நகரம்

நீதிமன்றத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்- திருப்பூரில் வைகோ பேச்சு!

மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் பிரிவினையை வளர்ப்பீர்களானால் அது ஒருமைப்பாடு மிக்க இந்தியாவாக இருக்காது. யுனைடெட் ஸ்டேட் ஆப் இந்தியாவாக, அமெரிக்காவை போல பல மாநிலங்கள் அடங்கிய இந்தியாவாக தான் இருக்கும் என திருப்பூரில் நடந்த மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசியுள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 9 Aug 2022, 10:43 am

ஹைலைட்ஸ்:

  • திருப்பூர் என்று சொன்னால் அது தியாகபூமி என வைகோ புகழாரம்
  • வழிநெடுகிலும் கருப்பும் சிவப்பும் கலந்த கொடிகளை அதிகளவில் பார்க்கிறேன்
  • நீதிமன்றத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்


ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil vaiko
திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் திருப்பூர் தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவை தலைவர் துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வைகோ பேசுகையில்; திருப்பூர் என்று சொன்னால் அது தியாகபூமி. பொதுவுடமை இயக்கத்தில் தங்களை அர்ப்பணித்து கொண்டு, தூக்கு மேடையும், துப்பாக்கி குண்டு வாங்கிய தியாகிகள் நிறைந்த ஊர் திருப்பூர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பிரிவு உபச்சார விழாவில் என்னை பேச அழைத்த போது, எனது நண்பர் வெங்கையா நாயுடு என்னிடம், நீங்கள் அதிகம் பேசுவீர்கள். நேரத்தில் அருமை கருதி மூன்று நிமிடம் மட்டுமே நீங்கள் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார். மூன்று நிமிடமே எனக்கு அதிகம் என்று அவரிடம் கூறினேன். அது போல தான் இங்கேயும் நேரத்தின் அருமை கருதி அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் விரைந்து எனது கருத்துக்களை கூறி முடிக்கிறேன்.

உதயநிதிக்கு பின் இன்பநிதியா? அவர்கள் என்ன அரச பரம்பரையா? ராஜ பரம்பரையா?- இபிஎஸ் தாக்கு!

இன்று திருப்பூர் நான் வந்ததிலிருந்து வழிநெடுகிலும் கருப்பும் சிவப்பும் கலந்த கொடிகளை அதிகளவில் பார்க்கிறேன். இது எனக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் தான் ஆட்சி மொழி, நீதிமன்றத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். அதே போல தான் இந்தியாவில் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி தான் ஆட்சி மொழியாக நீதிமன்றங்களில் இருக்க வேண்டும் அது தான் ஒருமைப் பாட்டுக்கு அடையாளம்.


அண்மையில் நாடாளுமன்ற கூட்டத்தில் நான் பேசும் போது, மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் பிரிவினையை வளர்ப்பீர்களானால் அது ஒருமைப்பாடு மிக்க இந்தியாவாக இருக்காது. யுனைடெட் ஸ்டேட் ஆப் இந்தியாவாக, அமெரிக்காவை போல பல மாநிலங்கள் அடங்கிய இந்தியாவாக தான் இருக்கும். எனவே நம்முடைய மொழி, இனம், மதம், கலாசாரம், பண்பாடு இவற்றை பாதுகாப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்வேம் என்றார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி