ஆப்நகரம்

ரேஷன் கடையில் இனி இத பண்ணாதீங்க... அமைச்சர் சாமிநாதன் கறார்!

திருப்பூர் மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் யாருக்கும் பொருள் இல்லை என்று சொல்லக்கூடாது என்றும் கெட்டுப்போன அரிசிகளை பொதுமக்களுக்கு வினியோகிக்க கூடாது. அதனை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 12 May 2022, 3:13 pm

ஹைலைட்ஸ்:

  • மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
  • செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்த நிலைத்தன்மை விவாதம்
  • முதியோர்களை ரேஷன் கடைகளில் அதிக நேரம் காக்க வைக்க கூடாது


ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டதில், அனைத்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பங்கேற்று தங்கள் செயல்பாடுகளை தெரிவித்தனர்.

மேலும் இந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்த நிலைத்தன்மை என்ன என்பது குறித்தும் அமைச்சர் விவாதித்தார்.

அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேரோட்டம்... முக்கிய அமைச்சர் பங்கேற்பு!

தொடர்ந்து ரேஷன் கடைகளில் யாருக்கும் பொருள் இல்லை என்று சொல்லக் கூடாது என்றும், கார்டுதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் கெட்டுப் போன அரிசிகளை பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முதியோர்களை ரேஷன் கடைகளில் அதிக நேரம் காக்க வைக்காமல், அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருட்களை வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி