ஆப்நகரம்

கறுப்புக்கொடியா? தேசியக்கொடியா? - அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பல்லடம் மக்கள்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையத்தில் புதிதாக அமைய உள்ள நவீன மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புகளில் கட்டப்பட்டுள்ள கறுப்புக்கொடியை அகற்ற வேண்டும் என்றால் மின் மயானம் அமைக்கும் முடிவை கைவிடுவதாக அரசு அறிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Aug 2022, 11:18 am
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பச்சாபாளையத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு நிதியில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நவீன எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் அருகில் எரிவாயு தகன மேடை அமைக்க அனுமதிக்க முடியாது என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எழுந்தது.
Samayam Tamil Palladam Electric crematorium


இந்நிலையில், பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பல்லடம் நகர்மன்ற தலைவர் முன்னிலையில் பல்லடம் வட்டாட்சியர், காவல் துறை, பல்லடம் நகராட்சி ஆணையாளர் ஆகியோர் பொதுமக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பொதுமக்கள், புதிதாக அமைய உள்ள நவீன எரிவாயு தகன மேடை அமைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கூறி பொதுமக்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

14 நாட்களாக கருப்பு கொடி ஏற்றி அப்பகுதி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளதால் கருப்புக் கொடி அகற்றுமாறு நேற்று பொது மக்களிடம் நகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் நகராட்சி அலுவலரும், நகராட்சி மன்ற தலைவரின் கணவரும் பல்லடம் எட்டாவது வார்டு கவுன்சிலர் கணவரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


ஆனாலும் புதிதாக அமைய உள்ள மின் மயானம் திட்டம் ரத்து செய்யப்படுவதாக வாக்குறுதி அளித்தால் மட்டுமே கருப்பு கொடியை அகற்றுவோம் எனவும் கருப்பு கொடியோடு தேசிய கொடியையும் ஏற்றுவோம் என பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களின் ஒரே குரலாய் மின் மயானம் வேண்டாம் என தெரிவிக்கும் போது பல்லடம் நகராட்சி ஆணையரும் நகர மன்ற தலைவரும் மக்களை வற்புறுத்தி திட்டத்தை நிறைவேற்ற காரணம் என்ன? என்றும் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி