ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசி போடாதவர்களை விரட்டி பிடிக்க முடிவு: வெளியானது எச்சரிக்கை அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களை விடமாட்டோம் என அடுத்த வாரம் வரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Samayam Tamil 22 Nov 2021, 1:22 pm
வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதி செய்து சந்தையினுள் அனுமதித்தனர். மேலும் தடுப்பூசி செலுத்தாதவர் களுக்கு அங்கேயே பிடித்து அமர வைத்து கொரோனா தடுப்பூசியு ம் செலுத்தப்பட்டது.
Samayam Tamil கொரோனா தடுப்பூசி போடாதவர்களை விரட்டி பிடிக்க முடிவு: வெளியானது எச்சரிக்கை அறிவிப்பு!


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு தோறும் தடுப்பூசிக்கென சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 17, 22, 019 ஆம், இரண்டாவது தவணையாக 7, 77, 433 ஆம் என மொத்தம் 24, 99, 452 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் செயல்படும், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் சந்தைக்கு வருபவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்த பின்னரே சந்தைக்குள் அனுமதித்தனர்.

ட்ரோன் பறக்க தடை முக ஸ்டாலினுக்கு பாதுகாப்பு முக்கியம்: திருப்பூரில் அதிரடி ஆர்டர்!
மேலும், தடுப்பூசி செலுத்தாவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை ஊசிகள் செலுத்தப்பட்டது. ஒலிபெருக்கி மூலமாகவும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சந்தைக்கு அதிகளவில் வருகின்ற காரணத்தால் இந்தி மொழியிலும் ஊசி செலுத்தவும், முக கவசம் அணியவும் தொடர்ந்து அறிவுறுத்தினர்.

அடுத்த செய்தி