ஆப்நகரம்

வெள்ளகோவிலில் மீண்டும் 11 ஆடுகள் திருட்டு.. தண்ணி காட்டும் மர்ம கும்பல்.. திணறும் போலீசார்!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே மீண்டும் விவசாய தோட்டத்தில் இருந்து 11 ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது காடுகளை தேடும் மர்ம கும்பலை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 29 Nov 2022, 7:11 pm

ஹைலைட்ஸ்:

  • விவசாய தோட்டத்தில் இருந்து மீண்டும் 11 ஆடுகள் திருட்டு
  • மர்ம கும்பலை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
  • இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வெள்ளகோவிலில் மீண்டும் 11 ஆடுகள் திருட்டு
வெள்ளகோவிலில் மீண்டும் 11 ஆடுகள் திருட்டு
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விவசாயி ஒருவரது தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம், அவிநாசி, பல்லடம் மற்றும் ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் செம்மறி ஆடுகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகின்றனர். மாவட்டத்தில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் இவ்வாறு வளர்க்கப் படுகிறது. இதனிடையே காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு செல்வது அதிகரித்து வருகிறது. இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்ட போதும் இதுவரை திருடர்களை காவல் துறையினர் கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.


இந்நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரம், அரண்மனைகருக்குபுதூர்
கிராமத்தைத் சேர்ந்த சக்திவடிவேல்‌ (47). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 80 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஆடுகள் மேய்ச்சல் முடிந்த பின்பு மாலை அனைத்து ஆடுகளையும் தோட்டத்திலுள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இன்று காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பட்டியில் அடைத்து இருந்த 80 ஆடுகளில் 11 ஆடுகள் காணாமல் போயிருந்தது. அக்கம் பக்கத்தில் சென்று விசாரித்து பார்த்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பட்டியை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை வெட்டி விட்டு மர்ம நபர்கள் 11 ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து விவசாய சங்க நிரிவாகிகளுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.‌ தொடர்ந்து இப்பகுதிகளில் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் ஆடுகளை மர்ம கும்பல் திருடிச்செல்வது குறித்து கூறினர். உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் இதுவரை காங்கயம் தாலூக்கா பகுதியில் மட்டும் சுமார் 100 க்ஙும் மேற்பட்ட ஆடுகள் கடந்த 2 மாதத்தில் திருட்டு போயுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தங்கமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொண்டுவரப்பட்ட திட்டத்தை கைவிடும் திமுக; கொந்தளித்த அதிமுக கவுன்சிலர்களால் பரபரப்பு!

இந்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். வெள்ளகோவில் அருகே விவசாயி பட்டியில் அடைத்து வைத்திருந்த 11 ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி