ஆப்நகரம்

திருப்பூரில் ஓடத் தொடங்கிய படகுகள்: 6 மணி நேரமாக சிக்கிய குடும்பங்கள் மீட்பு!

எங்கூர்லாம் ரொம்ப மேடான பகுதி.நேத்து பெஞ்ச மழைல படகுல போற அளவுக்கு இப்ப மாறிடுச்சு. 6மணி நேரமாக வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கி தவித்த குடும்பங்கள்.

Samayam Tamil 18 Nov 2021, 9:24 am
பல்லடம் அருகே மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்த 5 குழந்தைகள் உட்பட 11 பேரை படகுகள் மூலம் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
Samayam Tamil திருப்பூரில் ஓடத் தொடங்கிய படகுகள்: 6 மணி நேரமாக சிக்கிய குடும்பங்கள் மீட்பு!


வங்கக்கடலில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்று அலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது. அதன் படி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன் பாளையம், அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஆரம்பித்த கன மழை நள்ளிரவு வரை நீடித்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் அவினாசிபாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதனால் காலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர். வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி கடுமையாக தவித்து வந்து உள்ளனர்.

திருப்பூர் சாலையில் படகுதான் விடனும்: 5 மணி நேரம் வெளுத்த கனமழை!
இதற்கிடையே வெள்ளம் குறித்து அவினாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதை அடுத்து காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் வீடுகளில் சிக்கியிருந்த சங்கர், பிரியா அவர்களது குழந்தைகளான ஸ்ரீமதி(12), ஸ்ரீ ஹரி(9) உள்ளிட்டோரை மீட்டனர்.

அதேபோல் மற்றொரு குடும்பமான கார்த்திக், கார்த்திகா, மகாலட்சுமி, முத்துச்செல்வம் பிரவீன்(8), பிரனிதா(6), தர்ஷீத்(2) ஆகியோரை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி