ஆப்நகரம்

திருப்பூர் தாராபுரத்தில் விற்பனை வரித்துறை அலுவலரின் வீட்டில் நகை பணம் கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வசித்து வந்த விற்பனை வரித்துறை அலுவலரின் வீட்டில் ஏழு சவரன் நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 25 Apr 2023, 8:22 am

ஹைலைட்ஸ்:

  • விற்பனை வரித்துறை அலுவலர் வீடு

  • நகை பணம் கொள்ளை

  • போலீசார் தீவிர விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பூட்டி இருந்த வீட்டை கள்ளச்சாவி போட்டு திறந்து நகை மற்றும் பணம் கொள்ளை
பூட்டி இருந்த வீட்டை கள்ளச்சாவி போட்டு திறந்து நகை மற்றும் பணம் கொள்ளை
தாராபுரம் பகுதியில் விடுமுறைக்கு சென்ற குடும்பத்தினர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் சாலை மெட்ரோ சிட்டி அருகே உள்ள என்ஆர்எஸ் நகரில் ராஜதுரை.இவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அவர் விற்பனை வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். அவருடைய மனைவி தேன்மொழி. இவர்களுடைய மகன்கள் மித்ரன் மற்றும் ரண மித்திரன் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பண்டிகைக்காக மூன்று நாள் விடுமுறை கிடைத்ததனால் வெள்ளிக்கிழமை அன்று தங்கள் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குடும்பத்துடன் சென்று விட்டார்.
நகை பணம் கொள்ளை
நேற்று மாலை வீட்டுக்குவந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்படாமல் திறந்து இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜதுரை. வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைந்து சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க நகைகள், வீட்டிலிருந்தா வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த ரொக்க பணம் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் வீடு மற்றும் பீரோவின் கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து அதிலிருந்து பொருட்களை கொள்ளை அடித்ததும் தெரிய வந்தது.

திருப்பூரை குளிர்வித்த கோடை மழை.. பல்லடம் அருகே வீடுகள் சரிந்து சேதம்!

காவல் நிலையத்தில் புகார்
மேலும் இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் ராஜதுரை புகார் செய்ததை அடுத்து அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ராஜதுரை வீட்டை அடுத்த இருபுறமும் உள்ள முத்துலட்சுமி மற்றும் கிருபாகரன் ஆகியோர் வீடுகளிலும் கொள்ளையர்கள் புகுந்து பொருட்களை தேடி உள்ளனர். ஆனால் இரு வீட்டில் யாரும் இன்றி காலியாக இருந்ததால் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தாராபுரம் பகுதி மக்கள் அச்சம்
மேலும் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். தாராபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதினால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதினால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் அவரவர்கள் குடும்பத்துடன் வெளியூர் செல்வதும் சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று வருவதினால் இவ்வாறு வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வருகின்றது என போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி