ஆப்நகரம்

மனைவி பட்ட சந்தேகம், முகநூலில் லைவ் போட்டு தற்கொலை: திருப்பூரில் பெரும் பதற்றம்!

திருப்பூர் மாவட்டத்தில் சிலம்பாட்ட பயிற்சியாளர் ஒருவர் முகநூலில் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 27 Oct 2021, 3:06 pm
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட பயிற்சியாளர் ஒருவர் தனக்கு கடன் அதிகமாகி விட்டதாகவும், இதனால் தன் மனைவியை அவரது அம்மா வந்து அழைத்து சென்று விட்டதாலும் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, முகநூல் நேரலையில் வீடியோ பதிவிட்டு தூக்கு போட்டுக் கொண்டார்.
Samayam Tamil மனைவி பட்ட சந்தேகம், முகநூலில் லைவ் போட்டு தற்கொலை: திருப்பூரில் பெரும் பதற்றம்!


திருப்பூர் அருகே உள்ள நல்லூர் காட்டுப் பாளையம் அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். வயது 27. இவர் தனது மனைவி மாலினியோடு அங்கு வசித்து கொண்டு, அப்பகுதியில் விடுமுறை நாட்களில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிலம்பாட்ட பயிற்றுவிப்பவராக இருந்து வந்துள்ளார். இதன் மூலம் குறைந்த அளவு வருமானம் மணிகண்டனுக்கு கிடைத்து வந்து உள்ளது.

இந்த சூழலில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவிய நிலையில், சிலம்பாட்ட வகுப்புகள் நடப்பது தடைபட்டு, வருமானமும் பாதிப்படைந்துள்ளது. இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம், வீட்டிற்கு தெரியாமல் கடன் வாங்கி உள்ளார். 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கிய நிலையில் அதனை திரும்ப அடைக்க போதிய வருமானம் இல்லாததால் அவர் மன உளைச்சலில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.

இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு செல்போனுக்கு தொடர்ந்து தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் பணம் இல்லாமல் தவித்து வந்த மணிகண்டன் வீட்டில் இருக்கும் போது தொலைபேசி அழைப்புகளை தவிர்த்து வந்துள்ளார்.

அதேவேளை வீட்டில் இருக்கும் போது மணிகண்டன் தொலைபேசி அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்து வந்ததால் அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக மாலினிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி மணிகண்டன் பலமுறை இது தொடர்பாக விளக்கம் கூறியும் ஏற்காத மாலினி அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற மணிகண்டன் தனக்கு கடன் உள்ளதாகவும் அதனை அடைக்க ஏற்பாடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பலர் உயிரை காப்பாற்றிய மருத்துவர் கொரோனாவால் பலி: திருப்பூரே சோகத்தில் மூழ்கியது!
ஆனால் இதனை ஏற்காத மாலினி மற்றும் அவரது தாயார் இருவரும் இணைந்து காவல் நிலையத்தில் மணிகண்டன் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவரை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுக்க சென்றுள்ளனர். கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட மணிகண்டன், யாரும் இல்லாத நேரத்தில் தனது மாமியார் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து முகநூலில் நேரலை வீடியோ பதிவிட்டு, மாமியார் வீட்டின் முன்பு கயிற்றை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் அக்கம் பக்கத்தினர் மற்றும் நல்லூர் போலீசார் சென்று அவரை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதை அடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி