ஆப்நகரம்

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம்; திருப்பூரில் மாபெரும் பேரணி!

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய கோரி, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு தங்கள் விவசாயிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 10 Aug 2022, 11:04 am

ஹைலைட்ஸ்:

  • ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம்
  • மாபெரும் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள்
  • ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற போராடுவோம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருப்பூர்
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 21 ஆம் தேதி ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூரில் மாபெரும் பேரணி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் தலைமை வகித்தார். பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., பாஜக, காங்கிரஸ், அ.ம.மு.க, கொ.ம.தே.க, நாம் தமிழர் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
திமுகவுடன் கைகோர்த்துள்ள அதிமுக துரோகிகள்- எடப்பாடி கே.பழனிச்சாமி விளாசல்!

இக்கூட்டத்தில், ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் முடிவானது குடிநீருக்கான திட்டம் அல்ல. பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டமாகும். உபரி நீர் இருந்தால் எடுப்பதில் தவறில்லை. ஏற்கனவே பிஏபி பாசன பகுதிகளில் 8 டி.எம்.சி வரை தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், பாசன நீரை கொண்டு செல்வதை ஏற்க முடியாது. வரும் ஆகஸ்ட் 21 அன்று, திருப்பூர் வீரபாண்டி பிரிவில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை நடக்கவுள்ள பேரணியில் ஒற்றுமையுடன் அனைத்து விவசாயிகள், கட்சியினர் பங்கேற்ற வேண்டும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கூடுதல் தண்ணீர் பிஏபிக்கு பெற ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற போராடுவோம். ஆளும் கட்சியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றால், வரவேற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இதற்கான ஆலோசனை கூட்டங்களை பிஏபி பாசனம் பெறும் பகுதிகளில் நடத்தி பெருந்திரள் மக்களை பேரணியில் கலந்து கொள்வதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி