ஆப்நகரம்

திருப்பூர் தொழிலாளர்களுக்கு வீடு, காப்பீடு வசதி - சுப்பிரமணியன் தகவல்!

திருப்பூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Oct 2022, 12:35 pm
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல் நடைபெற்று நிறைவுடைந்த நிலையில் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமையன்று அப்பாச்சி நகரில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Samayam Tamil tirupur garments industry


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசியதாவது:
“திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் தொழில்துறை மற்றும் திருப்பூரில் வளர்ச்சிக்கு பணியாற்ற இருப்பதாகவும், தமிழக அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வரக்கூடிய சூழ்நிலையில் அதனை திருப்பூர் வரை விரிவாக்கம் செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம்.

குறைந்தபட்சம் 20 ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு வசதிகள் ஏற்பாடு செய்ய இருப்பதாகவும் ஆண்டுக்கு 20 சதவீத பின்னலாடை உற்பத்தி வளர்ச்சியை உறுதி செய்ய இருப்பதாகவும், லண்டன் மட்டும் யூரோ நாடுகளுடன் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
நொந்துபோன திருப்பூர் நெசவாளர்கள்.. இரும்பு கடைக்கு செல்லும் விசைத்தறிகள்!

தீபாவளிக்கு பின்பு தொழில் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு திருப்பூர் பின்னலாடைத்துறை மீண்டும் வளர்ச்சியை அடையும் எனவும் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் விபத்து காப்பீடு அடையாள அட்டை ஆகியவை ஏற்படுத்தி தரப்படும்” இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி