ஆப்நகரம்

இருளில் மூழ்கிய காங்கயம்!

காங்கயம் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

Samayam Tamil 17 Dec 2022, 9:48 pm
திருப்பூர் மாவட்டம் காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின் வாரியத்தினர் அறிவித்து இருந்தனர்.
Samayam Tamil tirupur district news


இதன்படி காங்கயம் துணை மின் நிலைய பகுதிகளான காங்கயம் நகரம், அகஸ்திய லிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூா்.சிவன்மலை துணை மின் நிலைய பகுதிகளில் சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், மொட்டா் பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆா்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூா், நாமக்காரன்புதூா், ரோ காா்டன், கோயம்பேடு, பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், ஜெ.ஜெ.நகா், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம் பகுதிகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

மேலும் ஆலாம்பாடி துணை மின் நிலையத்துக்ஙு உட்பட்ட நால்ரோடு, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூா், மறவபாளையம், சாவடி, மூா்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி, முத்தூா் துணை மின் நிலையம்: முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் பகுதிகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

பொங்கல் பரிசு; சூப்பர் மேட்டரை லீக் செய்த அதிகாரிகள்!
இதனை தொடர்ந்து காலை 9 மணிக்கு மின் நிறுத்தம் செய்யப்பட்டு பணியாளர்கள் மரக்கிளைகள் அகற்றுதல், பழுதான பீங்கான் அகற்றுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறாக மாலை வரை இந்த பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் மாலை 5 மணிக்கு மின்சாரம் வரும் என, மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மின்தடை நேரம் கடந்தும் இரவு 8 மணி வரையும் மின்சாரம் வரவில்லை. இதனால் பொதுமக்கள் வணிகர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்கு என, மின் நிறுத்தம் செய்யப்படும். ஆனால் கடந்த மாதம் மின் தடையின்போது மின் வாரியத்தினர் வேலை செய்யாமல் கடமைக்கு செய்தனர்.

உதயநிதி மகன் வந்தால்.. அமைச்சர் நேரு பரபரப்பு முடிவு!
இதன் காரணமாக இன்று மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்த நேரமான 5 மணியை கடந்தும் இரவு 8 மணி வரை மின்சாரம் வழங்கவில்லை. இதனால் நாங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளோம்.

மேலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் படிக்க முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி போனோம். இவ்வாறாக அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்வதால் எவ்வளவு சிரமம் என்பதை அதிகாரிகள் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அந்த அளவுக்கு நாங்கள் கஷ்டத்தை அனுபவித்தோம். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மின்வெட்டு குறித்து பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.

அடுத்த செய்தி