ஆப்நகரம்

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் 'தூரி ஆட்டம்'.. பழமையை மறக்காத திருப்பூர் மக்கள்!

ஆடிப்பெருக்கு நாளில் பழமையை மறக்காத காங்கேயம் பகுதி மக்கள் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Aug 2022, 11:14 pm
இயற்கை தந்த கொடைகளில் இன்றியமையாதது நீர். நீரை போற்றும் வகையில் சங்ககாலம் தொட்டு, தமிழர்கள் வாழ்வியலில் ஆடி 18 ஆம் நாளை, ஆடிப்பெருக்கு தினமாக, தண்ணீரை போற்றி வணங்கி வருகின்றனர். ஆடி மாதத்தில் ஆறுகள் பெருகி நீர் வரத்து பெறும். இந்த காலத்தில் பருவத்தே பயிர் செய்ய நீரை வணங்கி விதைப்பை ஆரம்பிக்க இந்த முறை சங்க காலம் தொட்டே கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
Samayam Tamil Aadi perukku special
தூரி ஆட்டம்


நீர் நிலைகள், ஆறுகள் அருகே விழாக்களை நடத்தி தண்ணீரை வணங்கி ஆடி மாதத்தில் விதைப்பு பணிகளை ஆரம்பிப்பர். அது இன்றும் தொடர்கிறது. இன்றைய தினம் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கிராமப்புறங்களில் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரும் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்ந்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை, காங்கயம் உள்ளிட்ட சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆடிப்பெருக்கு தினத்தை ஒட்டி பல கிராமங்களில் தூரி ஆட்டம் எனும் ஊஞ்சல் கட்டி ஆடும் வழக்கம் உள்ளது. குறிப்பாக உடுமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில், பழமையான வழக்கப்படி அங்குள்ள பொம்மையன் கோவில் முன்பாக பெரிய மரங்கள் நடப்பட்டு, மரப்பலகை கட்டி பெரிய ஊஞ்சல் அமைக்கப் பட்டது.இதனை தொடர்ந்து அந்த ஊஞ்சலுக்கு சந்தனம் குங்குமம்,மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் துணியில் 9 வகை தானியங்களை முடிந்து வைத்து பூஜைகள் செய்யப்பட்டது‌.
இது என்னடா டாலர் சிட்டிக்கு வந்த சோதனை.. திண்டாடும் திருப்பூர் மக்கள்!

இதனை தொடர்ந்து சிறுவர் சிறுமியர்கள் அமர வைக்கப்பட்டு ஊஞ்சலில் ஆடி மகிந்தனர்.இன்றைய ரோலர் கோஸ்டர், ஜெயன்ட் வீல் போல், சாங்க காலம் தொட்டே தூரி ஆடுவது வழக்கத்தில் உள்ளது. கடந்த 30 ஆண்டுக்கு முன்பு வரை ஊர் பொது இடத்தில் உள்ள மரக்கிளைகள், ஆலமரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடுவர்.காலப்போக்கில் மறையத் தொடங்கி வீட்டு முற்றத்துக்கு சென்று விட்டது. காலப்போக்கில் இது மறைந்து கொண்டே வருகிறது.

இந்த பழமையை மறவாமல் இருக்க அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், ஜல்லிப்பட்டி கிராம மக்கள் ஆடி பெருக்கு தினத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.இன்றும் அதேபோல் பெரிய ஊஞ்சல் அமைத்து சிறுவர் சிறுமியர்கள் விளையாடினர். இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் ஊஞ்சல் அமைத்த கிராம மக்களின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி