ஆப்நகரம்

55 இன்ஸ்பெக்டர்கள் வேலூரில் இடமாற்றம், டிஐஜி காமினி அதிரடி முடிவு!

வேலூர் சரகத்தில் பணியாற்றி வந்த 55 இன்ஸ்பெக்டர்களை மாவட்ட சரக டிஐஜி காமினி அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2021, 7:51 am
வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வந்த 55 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி காமினி உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil 55 இன்ஸ்பெக்டர்கள் வேலூரில் இடமாற்றம், டிஐஜி காமினி அதிரடி முடிவு!


வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த புனிதா அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த லதா திமிரி காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கருணாகரன் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கும், ஆலங்காயம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நாகராஜன் வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்: இலவச சிலம்ப வகுப்புகள் நடத்தும் இளைஞர்கள்...

இவர்கள் உட்பட வேலூர் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 55 இன்ஸ்பெக்டர்கள் மாவட்டத்தில் உள்ள வேறு காவல் நிலையங்களுக்கும், பிற மாவட்ட காவல் நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி