ஆப்நகரம்

திமுகவுக்கு ஓட்டு போட்ட அதிமுக… செய்யாறில் புதிய வரலாறு!

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம்(செய்யாறு) நகராட்சி சேர்மேன் பதவிக்கான மறைமுக தேர்தலில் திமுக தலைமைக்கு எதிராக போட்டியிட்ட அதே கட்சி வேட்பாளர் மோகனவேலு அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Mar 2022, 5:29 pm
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, திருவத்திபுரம்(செய்யாறு) நகராட்சிகள், செங்கம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், புதுப்பாளையம், போளூர், வேட்டவலம், தேசூர், கண்ணமங்கலம், கீழ்பென்னாத்தூர் மற்றும் களம்பூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
Samayam Tamil tiruvetipuram municipality


தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அனைத்து நகர்மன்ற தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதிமுக கடும் தோல்வியை சந்தித்தது.

இந்தநிலையில் நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மார்ச் 2-ம் தேதி அந்தந்த அலுவலகங்களில் கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாங்களை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக திருவத்திபுரம்(செய்யாறு) நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக - 18, அதிமுக - 3, பாமக - 2 -சுயேச்சை - 3, காங்கிரஸ் -1 வெற்றி பெற்றனர். இதனிடையே, நேற்று திருவத்திபுரம் நகராட்சி சேர்மேன் பதவிக்கு திமுக தலைமை வழக்கறிஞர் விஸ்வநாதனை அறிவித்தது.
ராணிப்பேட்டை: நகராட்சி, பேரூராட்சி சேர்மேன் விபரம்!

ஆனால், அவர் மீது அதிருப்தியில் இருந்த திமுக நிர்வாகி மோகன வேலு தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக களமிறங்கினார். இன்று காலை நடைபெற்று மறைமுக வாக்கெடுப்பில், திமுக, பாமக, அதிமுக மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் மோகன வேலு 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் விஸ்வநாதன் 11 வாக்குகள் மட்டுமே பெற்றார். திமுக அதிருப்தி வேட்பாளருக்கு அதிமுகவினர் வாக்களித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி