ஆப்நகரம்

அதிமுக பிரமுகர் போக்சோவில் கைது; கட்சியில் இருந்து நீக்கி திடீர் உத்தரவு!

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 16 வயது சிறுமிக்கு தொல்லை தந்த புகாரில் அதிமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கம் செய்து ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் உத்தரவிட்டுள்ளனர்.

Samayam Tamil 4 Aug 2021, 9:30 am
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் என்பவரின் மகன் கௌதம். இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், வேலூர் புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்


இவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி வந்ததாகவும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை கௌதமிடம் முறையிட்டபோது சிறுமியின் தந்தையை கௌதம் தகாத வார்த்தையால் பேசி திட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

அதோடு கடந்த ஜூலை 30 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களில் சிறுமியின் செல்போனுக்கு மெசேஜ் மற்றும் நான் சொல்வது போல் கேட்கவில்லை என்றால் உன்னை சீரழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி சிறுமியின் தந்தை குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உதவி காவல் ஆய்வாளர் காஞ்சனா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கௌதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பறக்கும் காவடியில் விபத்து; பறந்து வந்து விழுந்த பக்தர்!

இந்நிலையில் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அதிமுக தலைமைக்கு புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

பா.ரஞ்சித் வழக்கில் கோர்ட் அதிரடி; ராஜராஜசோழன் சர்ச்சைக்கு முடிவு!

அதில் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் குடியாத்தம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கௌதம் என்பவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி